மோடி எச்சரிக்கை எதிரொலி: பெட்ரோல் டீசல் விலை 1 லிட்டருக்கு ரூ.5 உயர்வு? கேஸ் விலை ரூ.50 உயர்வு?

Published On:

| By Mathi

PM Modi Fuel Price Hike

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (கேஸ் சிலிண்டர்) உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; அன்னிய செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்ன நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் நேற்று மே 10-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி இதனைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலை கடுமையாக உயரக் கூடும் என்கிற அச்சம் உருவாகி உள்ளது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மாதத்திற்கு சுமார் ரூ.30,000 கோடி நஷ்டத்தை எதிர்கொள்கின்றன.

அதாவது 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ24; 1 லிட்டர் டீசலுக்கு ரூ30 நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளன.

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டால்

  • 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ4 முதல் ரூ5 வரை உயரக் கூடும்.
  • வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரிக்கக்கூடும்.

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை முதல் முறையாக கடுமையாக உயர்த்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்கின்றன எண்ணெய் நிறுவன தகவல்கள்

மோடி பேசியது என்ன?

வெளிநாட்டு செலாவணியைச் சேமிக்க உதவும் வகையில், மக்கள் மீண்டும் வீட்டிலிருந்தே பணிபுரியும்- Work from home முறையை கடைபிடிக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், திருமணங்களுக்காக தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து பேசுகையில் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

மேலும் கொரோனா காலத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள், வீடியோ கான்பரன்சிங் போன்ற பல முறைகளை நாம் பின்பற்றினோம். அவற்றுக்கு நாம் பழகியும் இருந்தோம், இன்று, அந்த நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும், ஏனெனில் இது தேச நலனுக்கு உகந்தது. அவற்றுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

அதே போல, “பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேசத்தின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க மக்கள் தங்களின் விருப்பச் செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

“திருமணங்களுக்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share