தேர்தலில் விஜய்க்கு எதிராக 65% வாக்குகள்.. யாருக்குமே வெற்றி இல்லை.. திருமாவளவன்

Published On:

| By Mathi

Thirumavalavan Vijay Press meet

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்க்கு எதிராக 65 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன; இந்த தேர்தலில் யாருக்குமே வெற்றி இல்லை என்பதுதான் உண்மை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று மே 10-ந் தேதி செய்தியாளர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை யாருக்குமே வெற்றி இல்லை என்பதுதான் உண்மை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுக்கும் சேர்த்து 61 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த 61 சதவீத வாக்குகளும் இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு எதிரான வாக்குகள் என்றுதான் கருத வேண்டும். அவருக்கு 35 சதவீதம் கிடைத்திருக்கிறது, எஞ்சிய 65 சதவீத வாக்குகள் அவருக்கு எதிரானதுதான்.

ADVERTISEMENT

யாருக்குமே வெற்றி இல்லை என்பதுதான் உண்மை. மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அல்லது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துவிடக் கூடாது என்றும், எங்களைப் போன்றவர்களால் ஒரு விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என்கிற விமர்சனம் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டு அவருக்கு எங்கள் ஆதரவை நல்கி இருக்கிறோம். இந்த ஆதரவு வழங்கியதனால உடனே நாங்க சுவிட்ச் ஓவர் ஆயிட்டோம் அப்படின்னு அர்த்தம் கிடையாது. இப்போதைக்கு அவர் ஆட்சி அமைக்கணும், இங்க குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது. அவர் வெளிப்படையாக ஒரு மதச்சார்பற்ற அரசை நாங்கள் நிறுவ விரும்புகிறோம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அந்த கோரிக்கை நியாயமானது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share