விஜய் தவெக அமைச்சரவையில் இணைகிறதா விசிக? திருமாவளவன் தந்த அதிரடி தகவல்!

Published On:

| By Mathi

TVK Cabinet VCK Thirumavalavan

2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவது குறித்து அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

PTI செய்தி நிறுவனத்துக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எங்கள் உயர்நிலைக் குழுவில் நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், வெளியில் இருந்து ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் தவெக தலைவரோடு, ஜோசப் விஜய்யுடன் பேசவில்லை.

ADVERTISEMENT

ஆனால் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். பதவியேற்புக்குப் பிறகு அது குறித்துப் பேசலாம் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share