ஜெயலலிதா புகைப்படத்துடன் பதவி ஏற்று கொண்ட செங்கோட்டையன்

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த பின்னர் இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 9:30 மணிக்கு அவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி பதவி ஏற்க வேண்டும் என்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா விளக்கினார்.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து முதலாவதாக முதல்வர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், ராஜ்மோகன், நிர்மல் குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

செங்கோட்டையன் பதவி ஏற்கும் போது தனது சட்டை பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் வைத்திருந்தது கவனத்தை பெற்றது.

அவர்களைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT

அவரைத்தொடர்ந்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

எடப்பாடியை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எம்எல்ஏவாக பதவியேற்க வந்தார். அப்போது முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்து அதன் பின்னர், எம்எல்ஏவாக பொறுப்பேற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share