இரண்டாக உடையும் அதிமுக… ஈபிஎஸ்-க்கு 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம். எல்.ஏ. க்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் வீட்டில் எஸ் பி வேலுமணி சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

இதையொட்டி அதிமுக இரண்டாக உடைகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்று வெறும் 17 எம். எல். ஏ. க்கள் மட்டும் எடப்பாடிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அதில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சி. வி. சண்முகம் சட்டப்பேரவையில் பதவி கூட ஏற்காமல் பாதியிலேயே புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share