விஜய்யை கட்டியணைத்து வழியனுப்பிய வைகோ

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

பின்னர் அங்கிருந்து அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்துக்கு சென்றார்.

ADVERTISEMENT

அப்போது வாசலில் வந்து விஜய்க்கு சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார் துரை வைகோ எம்.பி.

இதையடுத்து வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய். தொடர்ந்து விஜய் தோளில் கை போட்டுக்கொண்டு வெளியே வந்தார் வைகோ.

ADVERTISEMENT

அப்போது இருவரும் கையை உயர்த்தி மதிமுக, தவெக தொண்டர்களுக்கு கையசைத்து உற்சாகத்தை வெளிபடுத்தினர்.

பின்னர் கார் வரை வந்து விஜய்யை கட்டியணைத்து வழி அனுப்பி வைத்தார் வைகோ.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share