விஜய் அமைச்சரவை விரிவாக்கம் : விசிக, ஐயூஎம்எல் புதிய அமைச்சர்களின் துறைகள் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay cabinet expansion vck iuml ministers portfolios

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்லும் வகையில், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு முக்கியத் துறைகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

புதிய அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக செயல்படுவார். இவர் சிறுபான்மையினர் நலம் மற்றும் வக்ஃபு வாரியத்துறையை கவனிப்பார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை (VCK) சேர்ந்த வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக செயல்படுவார். ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நலத்துறையை கவனிக்க உள்ளார்.

ADVERTISEMENT

இவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share