நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிகர் அஜித் உடன் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், அஜித் சக நடிகர்களை எடுத்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே 250 கோடி ரூபாய் வியாபாரம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகிய இரண்டையும் சேர்த்து விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட் 300 – 350 கோடி ரூபாய் என்றும், படம் வெளியாவதற்கு முன்பே 75% பட்ஜெட் தொகையைத் தயாரிப்பு நிறுவனம் எடுத்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாகவும் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
’பாதிக்கப்பட்ட மீனவர்களே கழிவை அகற்றுவது மனித தன்மையற்ற செயல்” : கமல்
