தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ‘அதிமுக அழைப்பு வராதா?’ என்று ஆரம்பத்திலிருந்து காத்திருந்தார். தொடர்ந்து, அதிமுக இரண்டாம்கட்டத் தலைவர்கள், 11-ம் தேதிவரை காத்திருக்க சொன்னார்கள். அதற்கும் காத்திருந்தார். தகவல் ஏதும் வரவில்லை.
இந்நிலையில் இன்று, நெய்வேலி – இந்திராநகர் வீட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘எனக்கு எதிரியான கட்சி, பாஜக-வும், காங்கிரஸ் கட்சியும்தான். இரண்டு கட்சிகளும் போட்டியிடும் தொகுதியில் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்வோம்’ என்றார்.
‘காங்கிரஸ், பாஜக, போட்டியிடும் தொகுதியில் அதிமுக, திமுக போட்டியிட்டால் உங்கள் ஆதரவு யாருக்கு?’ என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ‘ஈழப்பிரச்னைக்கு குரல் கொடுத்தவர் யார் சரியாக இருப்பார் என்று முடிவு செய்வோம்’ என்றவர், ‘பூரண மதுவிலக்கு படிப்படியாக குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். எங்களை இதுவரை யாரும் அழைக்கவில்லை. எங்கள் முடிவை ஏப்ரல் 22-ல் அறிவிப்போம்’ என்றார். வேல்முருகன் பேச்சில் அதிமுக வாடை அதிகமாகவே வீசப்பட்டது.
