கொளத்தூர் எம்எல்ஏ வி எஸ் பாபு மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உயிர் காக்கும் சுவாச கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் என எம் ஜி எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.









