கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானார்!

By Mathi

|

Published on 19 Nov 2026, 3:25 PM

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19) பிற்பகல் மாரடைப்பால் காலமானார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஎஸ் பாபு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக எம் ஜி எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்தது.

ஆனால் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் வி எஸ் பாபு மாரடைப்பு காரணமாக இன்று காலமானதாக எம் ஜி எம் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel