விஎஸ் பாபு மறைவு : ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – முதல்வர் விஜய் இரங்கல்!

By Kavi

|

Published on 19 Nov 2026, 4:16 PM

தமிழக வெற்றிக்கழக கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி எஸ் பாபு. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

ADVERTISEMENT

அவரது மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

ADVERTISEMENT

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வி.எஸ்.பாபு பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel