டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜூனா ‘டைவர்ஸ்’ ஏன்? விரைவில் வரும் ‘டும் டும்’ அறிவிப்பு?

By Minnambalam Desk

|

Published on 19 Nov 2026, 2:05 PM

Digital Thinani-Addhav Arjuna Divorce

வைஃபை ஆன் செய்ததும் “தெய்வம் தந்த வீடு… வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ஆரம்பிக்கும் போதே இவ்வளவு ஃபயரா?

ரொம்ப ஃபயராகி ஃப்ரையாகிடாதீங்க ப்ரோ.. நானே விஷயத்தை சொல்லிடறேன்.. மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாவை பிரியறதா அவரது மனைவி டெய்சி அறிவிச்சிருந்தாங்க இல்லையா? பொதுவாக இந்த மாதிரி பெர்சனல் விஷயங்களை நாம பேசுறது இல்லைதான்..

ADVERTISEMENT

ஆனால் இந்தியாவிலேயே மிகப் பெரிய நிறுவனமாக இருக்குது மார்ட்டின் குழுமம்.. ஆதவ் அர்ஜூனாவும் தமிழ்நாட்டின் அமைச்சர்; ஆளும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர்- முக்கியமான முகம்.. அப்படிங்கிறதால ஆதவ்- டெய்சி விரிசலுக்கு என்ன காரணம்னு விசாரிச்சோம் ப்ரோ.

ADVERTISEMENT

மார்ட்டின் குடும்பத்தோட பிரதான தொழிலே லாட்டரிதான். அங்கிட்டு சீனா பார்டரில் அருணாச்சல பிரதேசம் தொடங்கி இங்கிட்டு பாகிஸ்தான் பார்டரில இருக்கிற பஞ்சாப் வரைக்கும், இன்னொரு பக்கம் மியான்மர், வங்கதேச எல்லைகளில் இருக்கிற நாகாலந்து, மணிப்பூர், மேகாலயான்னு 13 மாநிலங்களில் மார்ட்டின் குழுமத்தின் லாட்டரி தொழில் கொடிகட்டிப் பறக்குது..

ADVERTISEMENT

இந்தியாவிலேயே 2001–2003-ல அதிக தனிநபர் வருமான வரின்னு சுமார் ரூ.100 கோடி கட்டினவர் மார்ட்டின். 2017-ல் இருந்து 2023 வரைக்கும் மார்ட்டின் குரூப்ஸ் கட்டுன ஜிஎஸ்டி வரியே ரூ.23,119 கோடி. 1985-ல் இருந்து 2023 வரைக்கும் மார்ட்டின் குரூப்ஸ் கட்டுன இன்கம்டாக்ஸ் மட்டும் ரூ.4,577 கோடி. இது எல்லாம் மார்ட்டின் குரூப்போட அப்பீசியல் ஸ்டேட்மெண்ட் ப்ரோ.

லாட்டரி மட்டுமல்ல ஸ்பின்னிங் மில்ஸ், ரியல் எஸ்டேட், ஹோட்டல்ஸ், ஃபைனான்ஸ் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருது மார்ட்டின் குழுமம்.

மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்.. இப்ப அதிமுக எம்.எல்.ஏ. இவங்களுக்கு சார்லஸ், டைசன், டெய்சி 3 பிள்ளைகள்.. சார்லஸ், புதுச்சேரியில கட்சி ஆரம்பிச்சு எம்.எல்.ஏ.வா இருக்கிறார்.. டைசன் பிசினஸ் பார்க்கிறார்.. டெய்சிதான் ஆதவ் அர்ஜூனா மனைவியாக இருந்தவங்க..

ஆதவ் அர்ஜூனா, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரோட அப்பா ராஜேந்திரன்… அம்மா சின்ன வயசிலேயே தற்கொலை செஞ்சுகிட்டாங்க.. அதுக்கு பிறகு தாய்மாமாதான் ஆதவ்வையும் அவரது சகோதரியையும் திருச்சிக்கு அழைச்சுட்டு போய் படிக்க வெச்சு ஆளாக்கினார்.. திருச்சியில் இருந்து கோவைக்கு ஜிம்மில் வேலை செஞ்சப்பதான் டெய்சியுடன் நட்பு- காதல்னு திருமணமானது.

இதை பத்தி மார்ட்டின் குடும்பத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “டெய்சியைப் பொறுத்தவரைக்கும் அவங்க முதலில் லவ் பண்ணினது ஆதவ் அர்ஜூனா பிரண்ட் ஒருத்தரைதான். அந்த காதல் பிரச்சனையாகிடுச்சு.. அதுல டெய்சி தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க.. அந்த டைம்ல ஆதவ் ஆறுதலா இருந்தார்.. ஆதவ் ஒர்க் பண்ணின ஜிம்முக்கும் போக வர இருந்தாங்க.. இதுல இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு லவ் ஆகி திருமணம் செஞ்சுகிட்டாங்க… இந்த திருமணத்துக்கு ஆதவ் அப்பாவை கூட கூப்பிடலை.

இப்படி மார்ட்டின் குடும்பத்துல ஆதவ் நுழைஞ்சாரு.. ஆதவ்வின் ஆக்டிவ்வான நடவடிக்கைகள் மார்ட்டினுக்கும் ரொம்பவே பிடிச்சு போனது.. தனக்கு நெருக்கமான சர்க்கிளில் ஆதவ்வை பத்தி சொல்லும் போது எல்லாம், “தம்பிகிட்ட 10 ரூபாய் கொடுத்தால் அதை 10,000 ரூபாயாக்கிடுவார்… அந்த அளவுக்கு திறமையானவர்”ன்னு ரொம்பவே சிலாகிச்சுதான் பேசுவார் மார்ட்டின்..

ஆதவ் அர்ஜூனாவும் 24X7 வேலை வேலைன்னுதான் இருந்தார்.. மார்ட்டின் சொன்னபடியே பணத்தை பல மடங்கு பெருக்கியும் காட்டினார் ஆதவ்.. மைக்ரோ லெவல் பைனான்ஸ் மாதிரி பிசினஸில் மார்ட்டின் குழுமம் இறங்கவும் ஆதவ் காரணமாக இருந்தார்.

மார்ட்டினை ‘அப்பாதான்’ன்னு ஆதவ் எப்பவுமே கூப்பிடுவார்.. அந்த அளவு மரியாதை வெச்சிருந்தார்.. மார்ட்டினும் ரொம்பவே நம்பினார்..

ஆனா ஆதவ் அர்ஜூனாவுக்கு தன் அப்பா கொடுக்கிற முக்கியத்துவத்தை மகன்கள் சார்லஸ், டைசனால ஏத்துக்க முடியலை.. அதிருப்தியை காட்ட ஆரம்பிச்சாங்க..

ஒரு கட்டத்துல ஆதவ் அரசியலுக்கு போக விரும்பினார்.. அதுக்கும் மார்ட்டின் 250 கோடி ரூபாய்க்கும் மேல கொடுத்தார்.. அந்த ஸ்டேஜில மூத்த மகன் சார்லஸ் ஓபனாக அப்பாவிடம், “நானும் அரசியலில் இறங்கனும்”ன்னு கேட்டார்.. ஆனால் மார்ட்டினோ ஆதவ்-க்கு கொடுத்த மாதிரி சார்லஸூக்கு முதலில் பணம் கொடுக்கலை.. இதுல ஆதவ் மேல சார்லஸுக்கு இன்னும் அதிருப்தி அதிகமாயிடுச்சு.. சார்லஸுக்கு தம்பி டைசனும் சப்போர்ட்.

இது மெல்ல மெல்ல குடும்ப பிரச்சனையாக மாறிடுச்சு.. மார்ட்டினும் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தி பார்த்தார்.. ஒன்னும் சரியாகலை.. இதுல மார்ட்டினுக்கும் உடல்நலன் பாதிச்சது..

இதுக்கு இடையில ஆதவ் ஒரு பக்கம்- சார்லஸ் ஒரு பக்கம் அரசியலில் தனித்தனி ரூட்ல போனாங்க.. ஆதவ் தவெகவில சேர்ந்து ஆளும் கட்சியில அமைச்சராகி சிஎம் விஜய் கேபினட்டில முதன்மையான நபரா இருக்கிறார்.. தமிழ்நாட்டுல லட்சக்கணக்கான இளைஞர்கள் ரோல் மாடலா நம்பி பாலோ அஃப் பண்ற சிஎம் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அதே நேரத்துல ஆதவ் அர்ஜூனாவின் மாமியார்- மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுக எம்.எல்.ஏ.வானாங்க.. சார்லஸ் புதுச்சேரி பாலிட்டிக்ஸ்ல பிசியாகிட்டார்.

ஆனாலும் ஆதவ்வின் தனிப்பட்ட வாழ்க்கையில கடந்த 5 மாசமாகவே பெரும் புயல்தான் சார்.. சென்னையில ஆதவ் இருக்கிற வீனஸ் காலனி, ஈசிஆர் பங்களாக்கள் எல்லாம் மார்ட்டின் வாங்கி கொடுத்ததுதான்.. ஒரே வீட்டுல ரெண்டு பேரும் தனித்தனி அறைகளில்தான் வாழ்ந்தாங்க.. பிரச்சனை அதிகமான நேரத்துல டெய்சி, பஞ்சாப் மாநில லாட்டரி பிசினஸ் பார்க்கிறதால வெளியில அதிகமாக போயிட்டாங்க… இந்த காலகட்டத்துல ஆதவ் பெயரில இருந்த சில சொத்துகளையும் மார்ட்டின் குடும்பம் எழுதி வாங்கிட்டாங்க..

ஆதவ்- டெய்சியோட பையனை சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒரு அம்மாதான் பார்த்துக்கிறாங்க.. ‘பாட்டி’ லீமா ரோஸ்தான் அந்த பையனை ரொம்பவே செல்லமா வெச்சுப்பாங்க.. அவங்கதான் அப்பப்ப வந்து அந்த பையனை வெளியே அழைச்சுட்டும் போறாங்க..

ஆதவ்வை பொறுத்தவரைக்கும் சார்.. யார் கூடவும் அதிகமாக இணக்கமாக இருக்கமாட்டார்.. Cut and Throw பாலிசிதான்.. அது அவரோட நேச்சர்.. அவர் பிரண்ட்ஸ் கூட நீண்டகாலமாக ஆதவ்வுடன் இருக்கமாட்டாங்க.. அவர் கூட படிச்சவங்க சில பேர் இன்னைக்கும் அவர் கம்பெனியில ’ஒர்க்தான்’ பண்றாங்க.. அந்த அளவுக்கு டிஸ்டன்ஸ் வெச்சுக்குவார்..

இன்னொரு விஷயம் என்னானா டெய்சியோட ஒன்னா படிச்சவங்கதான் சிந்து.. இவங்க வேறு யாருமல்ல சார்லஸ் மனைவிதான்..

டெய்சிக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் இடையே இப்படி தொடர்ந்து மன கசப்புகள் இருந்த நிலையில கொஞ்ச நாளைக்கு முன்னாடி லீமாரோஸ் பிறந்த நாளை மார்ட்டின் – லீமா ரோஸ்- சார்லஸ் எல்லாரும் ஆஸ்திரேலியாவில கொண்டாடினாங்க.. அப்ப ஆதவ்- டெய்சி விவகாரத்தை பேமிலியில டிஸ்கஷன் செஞ்சாங்க.. இனியும் ஆதவ் அர்ஜூனாவுடன் சேர்ந்து வாழ முடியாதுன்னு டெய்சி முடிவெடுத்த விஷயத்தையும் ஆஸ்திரேலியா டிரிப்ல பேசினாங்க..

இந்த ஆஸ்திரேலியா டிரிப் முடிஞ்ச ஒரே வாரத்துல போன நவம்பர் 16-ந் தேதி டெய்ஸி அறிக்கை வெளியிட்டிருந்தாங்க.. அதுலதான், “ஆதவ் அர்ஜூனாவுடனான 14 வருஷ திருமண வாழ்க்கையை முடிச்சுகிட்டு புதிய பாதையில பயணிக்க போறோம்”னு வெளிப்படையாகவே அறிவிச்சுட்டாங்க”ன்னு சொன்னாங்க ப்ரோ..

சோ நெக்ஸ்ட் ஆதவ்- டெய்சி மூவ்ஸ் என்னவாம் ப்ரோ?

இதை பத்தியும் மார்ட்டின் ஃபேமிலி நண்பரிடம் கேட்டப்ப, “இதுக்கு அப்புறம் என்னான்னா.. ஆதவ் அர்ஜூனாவும் டெய்சியும் இனி அவங்க விரும்பி கொண்டிருக்கும் நபர்களை திருமணம் செய்து கொள்வாங்க.. விரைவில் திருமண அறிவிப்புகள் வரும்”ன்னு பூடகமாக சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel