நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
அடுத்ததாக ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் 12வது படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் VD 12 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோவையும் படக் குழு வெளியிட்டது.
ஆனால் அதன் பிறகு கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஸ்ரீலீலா இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியானது. ஶ்ரீலீலாவிற்கு பதிலாக ராஷ்மிகா இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் பாக்கியஸ்ரீ போர்ஸ் (Bhagyashree Borse) ஹீரோயின் ஆக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் VD 12 குறித்த ஒரு சூப்பர் அப்டேட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அது என்னவென்றால், அனிருத் இசையமைக்க போகும் இந்த படத்தில் எந்த பாடல்களும் இடம்பெறப் போவதில்லை என்றும் கைதி படத்தை போல வெறும் பேக்ரவுண்ட் ஸ்கோர் மட்டுமே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஒரு படமாக VD 12 உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் ஒரு படம் வெளியாக போகிறது என்றாலே அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்.
ஆனால் இந்த முறை அனிருத் முழுக்க முழுக்க எக்ஸ்பிரிமென்டலாக ஒரு படத்திற்கு பேக்ரவுண்ட் ஸ்கோர் மட்டும் செய்ய போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து VD 12 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொளுத்தும் வெயில் : அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைதான்… வானிலை அப்டேட்!
நீலகிரி ஸ்ட்ராங் ரூம்… 26 நிமிட ஃபுட்டேஜ் இல்லை: கலெக்டர் ஷாக் தகவல்!