முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் வைகோ

Published On:

| By Mathi

Vaiko Vijay

தமிழக முதல்வர் விஜய்யை (Vijay) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) இன்று (ஜூன் 17) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசுகிறார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, திமுக மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? இல்லையா? என்பது குறித்து வரும் 27-ந் தேதி நடைபெறும் அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட இருக்கிறது.

இதனிடையே வைகோவை அவரது இல்லத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, “சமூக நீதி” அரசியல் பற்றி கலந்துரையாடியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் வைகோ சந்திக்கிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share