காலையில நல்லா பொங்கல் சாப்டுட்டு வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நண்பன் ஒருத்தன் இன்னைக்கு வேஷ்டி, சட்டை போட்டு ஸ்டேட்டஸ் போட்ருந்தான். “மாப்ள…வேஷ்டில்லாம் கட்டி மாஸ் பண்றியேண்ணு” அவனுக்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டேன்.
பதிலுக்கு, “நீ வேற மாப்ள…யூடியுப்ல வீடியோ பார்த்து வேஷ்டி கட்றதுக்கு நான் பட்ட பாடு இருக்கே…இதெல்லாம் சீக்ரெட்…யார்கிட்டயும் சொல்லிராத அப்டின்னு” மெசேஜ் பண்ணான்.
“இது என்னடா புது சீக்ரெட்டா இருக்குன்னு சொல்லிட்டு” சிரிக்கிற ஸ்மைலி ஒன்னு தட்டி விட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கோழியின் கிறுக்கல்!!
டேய் பையனை பதினொன்றாவது எந்த Groupல சேர்த்தலாம்னு தேடிட்டு இருக்கேன், இப்ப வந்து மேட்ரிமோனி ஆஃப் டவுன்லோடு பண்ணுன்னு மெஸேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க!?

Mannar & company™
ஏன்யா பொங்கல் பொங்குறதுக்குள்ளே அடுப்பை ஆஃப் பண்ணிட்டே?
ம்ம்.. அடுப்பை துடைச்சி சுத்தம் பண்றது நான்தானே!

Sasikumar J
ஏய் இங்க பாருடி பொங்கல் சாப்பிட்டு புது படம் பார்க்க தியேட்டருக்கு கிளம்பிட்டாரு..!
நானே பொங்கல் வைக்க புது பச்சரிசி வாங்கணும் யா பழைய பச்சரிசி வாங்கணுமான்னு தெரியாம இப்ப தான் வாங்க போயிட்டு இருக்கேன்…!!

amudu
“ஒருவரின் மனைவி ஊருக்கு போய் இருக்கிறார்” என்பது கூட, அந்த ஆண் மீது, மற்றொரு ஆண் பொறாமைப் பட போதுமானதாக இருக்கிறது.

ச ப் பா ணி
செல்ஃபி ஸ்டிக்கோட இருக்கிற ஆண்களையெல்லாம்.. மாப் ஸ்டிக்கை கையில் கொடுத்து நிறுத்த வச்சிடுது பொங்கல்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15க்குள் வெளியேற வேண்டும்” – மாலத்தீவு அதிபர்
ஜி: 15ம் தேதின்னு சொன்னதால தப்பிச்ச.. இதுவே 14ம் தேதின்னு மட்டும் சொல்லிருந்தா நடக்கறதே வேற..

கடைநிலை ஊழியன்
me – அம்மா.. சாப்பிட ஏதாவது snacks இருக்கா..
அந்த டேபிள் ‘ல பொங்கல் இருக்கு பாரு.. எடுத்து சாப்பிடு..