இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு மதியம் திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நண்பர்கள் கூட நியூஸ் சேனல்ல பார்த்துக்கிட்டு இருந்தேன்…

சூரனை முருகன் வதம் செஞ்சதும்… “அசுரனின் ஆணவம் ஒழிந்ததுன்னு” பிரேக்கிங் போட்டாங்க…

நண்பன், “என்னடா இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவாங்கன்னு” கேட்டான்.

“பிரேக்கிங் போடலன்னா தான் நீ கேள்வி கேட்கனும்… இதெல்லாம் சாதாரணமப்பான்னு” அவன்கிட்ட சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
என்னங்க is a word யோவ் கூப்பிடுறது காதுல விழல is an emotion #மனைவியதிகாரம்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
யாராவது ரொம்ப நாளா call பண்ணாலும் எடுக்காம, மெசேஜுக்கும் ரிப்ளை பண்ணாம இருக்காங்களா..?
ரொம்ப சிம்பிள். ரெண்டு மெசேஜ் அனுப்பிட்டு அவங்க படிக்கறதுக்குள்ள டெலிட் பண்ணிருங்க.. மீதியை மேல இருக்கறவன் பாத்துக்குவான்!
ச ப் பா ணி
தோண்டிப் போட்ட சாலைகள் ‘ஒரு வழியாக்கி’விடுகின்றன நம்மையும் போக்குவரத்தையும்
கடைநிலை ஊழியன்
மை மனசாட்சி – போதும் டா சாமி.. நீ தயவு செஞ்சு உருப்படனும் னு மட்டும் நினைக்காத..
உன்னால எனக்கு பிரஷர் ஆகுது டா..
ச ப் பா ணி
90கிட்ஸ்க்கு கல்யாணம் நடந்திருக்காது
2k கிட்ஸ்க்கு கல்யாணம் ‘மட்டும்’ நடந்திருக்காது
நெல்லை அண்ணாச்சி
எனது வெற்றி அமெரிக்காவுக்கு பொற்காலமாக இருக்கும்… …டிரம்ப்
# எங்க டெய்லரும் இதே தான் சொன்னாரு….!!!!
ச ப் பா ணி
பேசுனது பொய்யினு ஃபேசை வைத்து கண்டுபிடிக்கிறாங்க, இல்லன்னா பேச்சை வைத்து கண்டுபிடிக்கிறாங்க #மனைவியதிகாரம்
balebalu
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் – கமலா ஹாரிஸ் சிம்பிளா நம்ம ஊர் மாதிரி ‘வெற்றிகரமான தோல்வி’ ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்
Sasikumar J
கெமிஸ்ட்ரி லேப்ல சொல்யூஷன் கொஞ்சம் மாறினாலும் ரிசல்ட் வேற கலர்ல வர மாதிரி தான் முயற்சிக்க கொஞ்சம் தவறினாலும் வெற்றியும் மாறும்…!

ArulrajArun

2026ல் கூட்டணி ஆட்சி நடக்கும்; ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும்”-பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சோளிங்கரில் பேட்டி

# தமிழக மக்கள்; த வெ க மாநாட்டை ரொம்ப உற்று நோக்கி இருப்பார் போல

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share