தனிக்குடித்தனம் போக கேட்ட அகோரி… ரூமுக்குள் வைத்து கதற வைத்த மனைவி! தாய் வீட்டில் தஞ்சம்!!

தமிழகம்

அகோரி கலையரசனுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது இன்ஸ்டா பேஜில் பிரகலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் என் கணவர் கலையரசனை காணவில்லை, அவரை பார்த்தால் என்னிடம் சொல்லுங்கள், இல்லாவிட்டால் போலீஸில் பிடித்து கொடுத்துவிடுங்கள். அவரால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து விட்டது . எனது கணவர் கோயிலிலும் கூட பெண்களுடன் தகாத உறவில் இருந்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அகோரி  கலையரசனுக்கும் அவரின் மனைவி பிரகலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது, அகோரி கலையரசன் தன் மனைவியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தன் மனைவியை தனிக்குடித்தனம் போக கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த அவரின் மனைவி பிரகலட்சுமி  வீட்டு அறைக்குள் அடைத்து வைத்து அகோரியை கதற கதற அடித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், பூஜை செய்ய போவதாக கூறி வீட்டை விட்டு கலையரசன் வெளியே வந்துள்ளார். அப்போது, உடன் அவரின் மாமனாரும் பாதுகாப்புக்கு சென்றுள்ளார். ஆனால்,  அவரிடத்தில் இருந்து  தப்பிய அகோரி கலையரசன்  புளியந்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு ஓடியுள்ளார். அங்கு, தன்னை தவறான வழியில் பணம் சம்பாதிக்க தூண்டியதாகவும் அவர் மனைவி மீது குற்றம் சாட்டியுள்ளார். தன் மனைவி மீதும் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே புளியந்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு வந்த அகோரியின் மனைவியும் புகார் கொடுத்தார்.  இதையடுத்து, இருவரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தை அணுகி விவகாரத்து பெற முடிவு செய்துள்ளதாக அவரின் மனைவி பிரகலட்சுமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

கொடநாடு விவகாரம்… எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
+1
4

1 thought on “தனிக்குடித்தனம் போக கேட்ட அகோரி… ரூமுக்குள் வைத்து கதற வைத்த மனைவி! தாய் வீட்டில் தஞ்சம்!!

  1. அட அப்ரசன்டி எடிட்டா
    உன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த பத்திரிக்கைகளோடு என் நண்பர்களிடம் பரிந்துரை செய்துகொண்டு இருக்கிறேன்…
    நீ என்னவென்றால் YouTube content எடுத்து செய்தியாக போட்டு இருக்கிறாய்
    அட போப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *