விறுவிறுக்கும் கட்சிப் பணிகள்… கள ஆய்வு குழுவை நியமித்த எடப்பாடி

Published On:

| By Selvam

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, “செயல்வீரர்கள் கூட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்” என்று நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

இந்தநிலையில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்வதற்காக கள ஆய்வுக் குழுவினரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும் அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக அதிமுக சார்பில் ‘கள ஆய்வுக் குழு’ கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

கே.பி. முனுசாமி,  துணைப் பொதுச் செயலாளர்

திண்டுக்கல் சீனிவாசன், பொருளாளர்

நத்தம் விசுவநாதன், துணைப் பொதுச் செயலாளர்

தங்கமணி, அமைப்புச் செயலாளர்

எஸ்.பி.வேலுமணி, தலைமை நிலையச் செயலாளர்

ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர்

சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர்

செம்மலை, அமைப்புச் செயலாளர்,

பா.வளர்மதி, மகளிர் அணிச் செயலாளர்

வரகூர் அ. அருணாசலம், அமைப்புச் செயலாளர்

மேற்கண்ட குழுவினர் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் கள ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். அதிமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இனி அவகாசம் கேட்க கூடாது : செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

ஆலமரத்தை வெட்ட பிளேடா? – விஜய்க்கு உதயநிதி பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share