கங்குவா படத்தில் Underwater சண்டை காட்சி..! வைரல் தகவல்..!

Published On:

| By christopher

Underwater fight scene in Kanguva movie

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் கோவா தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டது. அந்தப் போஸ்டரில் கையில் தீப்பந்தத்துடன் சூர்யா மாஸாக போஸ் கொடுக்கும் ஸ்டில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ADVERTISEMENT

இந்நிலையில் கங்குவா படத்தின் மேக்கப் ஆர்டிஸ்ட் ரஞ்சித் அம்படி கங்குவா படத்தில் பல வித்தியாசமான சண்டை காட்சிகள் இருப்பதாக கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதாவது, கங்குவா படத்தில் தண்ணீருக்குள் ஒரு சண்டைக்காட்சி, மரத்தின் கிளையில் நின்றபடி ஒரு சண்டைக் காட்சி என பல வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகள் இருப்பதாக ரஞ்சித் அம்படி சமீபத்தில் ஒரு மலையாள யூடியூப் சேனல் இன்டர்வியூவில் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ள கங்குவா படத்தின் Glimpse வீடியோ ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது கங்குவா படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து ரஞ்சித் அம்பாடி கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

கங்குவா படம் 10 மொழிகளில் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

தனுஷ் குரலில் “கில்லர், கில்லர், கேப்டன் மில்லர்” பாடல்…!

நாளை முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!

அனிமல் படத்தில் அப்பா – மகன் பாசம்: புதிய பாடல் வெளியானது!

BiggbossTamil7: ‘சேர்க்கை சரியில்ல’ விளாசிய விசித்ரா… ஆடிப்போன ஜோவிகா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share