BiggbossTamil7: ‘சேர்க்கை சரியில்ல’ விளாசிய விசித்ரா… ஆடிப்போன ஜோவிகா!

சினிமா

பிக்பாஸ், ஸ்மால்பாஸ் என இரண்டு வீடாக பிரித்தது போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஒரே வீட்ல ஒண்ணா இருந்து சண்டை போடுங்க என்று, கேப்டன் தினேஷுக்கு பிக்பாஸ் அன்பு கட்டளையிட்டார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிகபட்சமாக கானா பாலா, சரவண விக்ரம், விசித்ரா, ஆர்ஜே பிராவோ, மணி சந்திரா, பூர்ணிமா, ரவீனா, அக்ஷயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆச்சரியமாக மாயா இதில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் விசித்ரா-ஜோவிகா சண்டை போடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் நான் கேம் ஆடணும் நெனைச்சு ஆடலை இவங்களா வலையில வந்து விழுறாங்க என விசித்ரா, தினேஷிடம் கூறுகிறார். பதிலுக்கு தினேஷ் ஜோவிகா உங்களுக்கு சொன்ன பாயிண்டை கவனிச்சீங்களா? என எடுத்து கொடுக்கிறார்.

மேலும் ஜோவிகாவுக்கு படிப்பு குறித்து நான் சொன்ன பாயிண்ட் எதார்த்தமாக சொன்னது தான் அதை அப்படியே அவர் மாற்றி விட்டார். தற்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த மனிதர்களுடன் நட்பில் இருக்கிறார். அதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்று விசித்ரா ஆத்திரப்படுவது போல அந்த ப்ரோமோ வீடியோ உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் விசித்ரா சொல்வது உண்மை தான் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டாசை கொளுத்தி போடு என்று பிக்பாஸ் நேற்று எபிசோடில் (நவம்பர் 13) ஒரு டாஸ்க் கொடுத்தார். இதில் வெடி ஒன்றை விசித்ராவுடன் ஒப்பிட்டு ஜோவிகா தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த, அதுதான் தற்போது இருவருக்கும் இடையில் பற்றிக்கொண்டு எரிகிறது போல. இது தானாக அணைந்து விடுமா? இல்லை கொளுந்து விட்டு எரியுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

Exclusive Video: சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா? – மருத்துவர் விளக்கம்!

இந்தியா vs நியூசிலாந்து போட்டி: மழை பாதித்தால் என்ன நடக்கும்?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *