நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்டன் மில்லர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்த படத்தின் பார்ட் 2 மற்றும் 3 ஆகியவை வெளியாகும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் நடிகர் தனுஷ் ஓர் பாடல் பாடி உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You cannot win when im alive .. and today is not my time to die …
ITS YOURS 🔥🔥🔥
இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….
நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….Killer killer captain miller …..
Killer killer captain miller …..… pic.twitter.com/Xi8QnVff2n— G.V.Prakash Kumar (@gvprakash) November 14, 2023
இந்த தகவல் குறித்து கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, கேப்டன் மில்லர் படத்தில் “கில்லர், கில்லர்… கேப்டன் மில்லர்” என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷின் வித்தியாசமான தோற்றமும், படத்தின் கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கூடிய விரைவில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ODI தரவரிசை: டாப் 5க்குள் நுழைந்த ரோகித் சர்மா… இந்தியா ஆதிக்கம்!
கோவா: தெரு நாயால் தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விமானம்!