தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை (நவம்பர் 16) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை தொடர்ந்து 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் முதல் நாள் வருவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் வரை மண்டல பூஜைகள் நடைபெற்று மூடப்படுகிறது. பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 2024 ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு தரிசனமும், தொடர்ந்து படி பூஜைகளும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை (நவம்பர் 16) முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கோவா: தெரு நாயால் தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விமானம்!
பயிர் காப்பீட்டு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்