அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்க அவருடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர். ஹர்ஷவரதன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓர் ஆக்ரோஷமான இளைஞராக, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 3 வது பாடலை படக் குழு வெளியிட்டுள்ளனர். “Papa Meri Jaan” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் தமிழ் வெர்ஷனுக்கு “நீ என் உலகம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்பா-மகன் இடையே இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமைத்துள்ளது.
அனிமல் படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிச்சயமாக இந்த படம் ஒரு டிரெண்ட் செட்டராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு!
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?