‘Reels அரசின் எண்ணம் நிறைவேறாது’- அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி, உதயநிதி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

முதல்வர் விஜய் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசிய வழக்கில் இன்று (ஜூலை 3) திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ADVERTISEMENT

தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது Sofa Model அரசு.

அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.” என பதிவிட்டுள்ளார்.

கனிமொழி கண்டனம்

இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share