அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று ஆறாவது நபராகக் கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாகச் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது. மேலும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
Sofa Model அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.
