Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

என்எல்சி பங்குகளை தவெக அரசே வாங்க வேண்டும்-ஈபிஎஸ் வலியுறுத்தல்

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Jun 2026, 2:51 PM

EPS Budget 2026 27
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு NLC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது, சுமார் 3.56 சதவீத பங்குகளை தமிழ் நாடு அரசின் சார்பில் வாங்கியதைப் போல, தற்போதைய TVK அரசும், NLC நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் NLC நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும்.

ADVERTISEMENT

நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2006-ஆம் ஆண்டு NLC நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, கழக அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டன.

ADVERTISEMENT

அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் “NLC பங்குகளை விற்பனை செய்ய, காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு முயன்றால், நானே களத்திற்கு வந்து எனது தலைமையில் பங்கு விற்பனைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவேன்” என்று எச்சரித்ததன் விளைவாக, அந்தப் பங்கு விற்பனையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முழுமையாகக் கைவிட்டது.

தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு SEBI விதிமுறைகளைக் காரணம் காட்டி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56% NLC பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மீண்டும் தற்போது மத்திய அரசு NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டில் NLC நிறுவனம் அமைக்கப்படும்போது, ஏறக்குறைய 23 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அரசுதான் நிறுவனத்தை நடத்தும் என்ற நம்பிக்கையோடு அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிலங்களை வழங்கினார்கள்.

அவர்களது நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், NLC நிறுவனத்தை தொடர்ந்து அரசுடைமை நிறுவனமாகவே நடைபெறுவதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி செய்யும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசு NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கடந்த காலங்களில் NLC பங்கு விற்பனைக்கு எதிரான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போதும் NLC நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தப் போராடும்.

மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் NLC ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவை வழங்கும்.

‘ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்’

என்ற குறளைப் பின்பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் 2013-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு NLC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது, சுமார் 3.56 சதவீத பங்குகளை தமிழ் நாடு அரசின் சார்பில் வாங்கியதைப் போல, தற்போதைய TVK அரசும், NLC நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

2013-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் NLC பங்குகளை வாங்கியதன் மூலம், NLC பங்குகள் தனியார் வசம் போவது தடுக்கப்பட்டது; தொழிலாளர் நலன் காக்கப்பட்டது மற்றும் தமிழக அரசிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று TVK அரசின் முதலமைச்சரை வற்புறுத்துகிறேன்.

NLC பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை TVK அரசின் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதன்மூலம் NLC தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் காக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களின் எதிர்காலமும் காக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • ரெட்சோன் பகுதியாக திருப்பரங்குன்றம் : போலீஸ் குவிப்பு!

    23 Nov 2026, 8:46 PM

  • TVK MLA Arul Vignesh-High Court-Kallakurichi

    டிஜிட்டல் திண்ணை: ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ்… நீதிபதிக்கு என்ன சொல்லனும்? கோட்டையில் சீரியஸ் டிஸ்கஷன்!

    23 Nov 2026, 6:36 PM

  • அரியலூர்: அரசு பள்ளியில் மலம் வீசப்பட்ட சம்பவத்தால் பதற்றம் -போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் கைது

    23 Nov 2026, 5:56 PM

  • Water War

    ‘வாட்டர் பாட்டில்’ ’WAR’? GST குறைப்பு.. ரூ.15-க்கு ரிலையன்ஸ் குடிநீர்.. பிஸ்லெரிக்கு FSSAI நெருக்கடி.. என்ன நடக்கிறது?

    23 Nov 2026, 5:52 PM

  • முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்: விசிக எம்எல்ஏ ஆப்செண்ட்!

    23 Nov 2026, 5:40 PM

  • ரூ.5 கோடி லஞ்சப் புகார்… அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக ஆளுநர், தலைமை செயலாளருக்கு பறந்த கடிதம்!

    23 Nov 2026, 5:02 PM

  • WhatsApp Web-Union Govt

    WhatsApp Web பயன்படுத்தும் அரசு ஊழியர்களே உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை!

    23 Nov 2026, 4:16 PM

  • மூன்று நாட்களில் வசூலை அள்ளிய தனுஷின் ’ஓம்’!

    23 Nov 2026, 3:52 PM

  • ‘திருப்பரங்குன்றம் தீபம்’ மதுரை மக்கள் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் – அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

    23 Nov 2026, 3:44 PM

  • Digital Thinnai_ Stalin CPR Meeting

    டிஜிட்டல் திண்னை: கல்யாண வீட்டில் ’கச்சேரி’.. ஸ்டாலினிடம் சிபிஆர் பேசியது என்ன? சென்னை ரோட்டில் தவித்த 2 மாநில முதல்வர்கள்!

    23 Nov 2026, 3:09 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus