டிஜிட்டல் திண்ணை: எஸ்.பி. வேலுமணி மீண்டும் ‘கலகம்’.. கோவை மீட்டிங்கில் கொந்தளிப்பு.. எடப்பாடி அதிர்ச்சி.. என்ன நடந்தது?

Published On:

| By Minnambalam Desk

Digital ThinnaI: AIADMK S.P. Velumani creates a stir again

வைஃபை ஆன் செய்ததும், “உன் எல்லையைத் தாண்டிப் பறப்பேன்,
என் இலக்கை நான் அடைவேன்” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. எங்கே ‘கலகம்’?

‘கழகத்தில்’தான் கலகம்.. அதாவது அதிமுகவில்தான் மறுபடியும் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறாரு மாஜி எஸ்பி வேலுமணி..

ADVERTISEMENT

எடப்பாடி பக்கம் ரிட்டர்ன் ஆன எஸ்பி வேலுமணி அணிக்கு புதிய பதவிகளை கொடுக்கப்பட்டுச்சு இல்லையா? ஆனால் பழைய மா.செ.க்கள் பதவிதான் வேணும்னு வேலுமணி டீம் ‘ஒத்தகாலில்’ நிக்குது..

கோவையில நேத்து எஸ்பி வேலுமணி திடீர்னு தன்னோட ஆதரவாளர்களை ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்துனாரு.. இந்த கூட்டத்துல அதிமுக கட்சி கொடி, எடப்பாடி படம் எல்லாமே மிஸ்ஸிங்..

ADVERTISEMENT

இந்த கூட்டம் முடிஞ்ச உடனே நடந்த பிரஸ்மீட்ல, “தேர்தலில் இரவு, பகலாக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி கூறி, அவர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை; உள்ளே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இருந்தன” என்று மட்டும் சொன்னார் எஸ்பி வேலுமணி..

இந்த கூட்டத்துல கலந்துகிட்ட எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “மீட்டிங் ஆரம்பிக்கும் போதிருந்தே எஸ்பி வேலுமணி ரொம்ப டென்ஷனாதான் இருந்தார்.. கூட்டத்துல பேசுனவங்க எல்லாரும், எஸ்பி வேலுமணிக்கு பழைய மா.செ. பதவி தரலைன்னு ஆதங்கப்பட்டாங்க..

ADVERTISEMENT

எஸ்பி வேலுமணி பேசுறப்ப, சென்னையில எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 நாட்கள் என்ன நடந்துச்சுன்னு விரிவா சொன்னார்.. அதுக்கு பிறகு, “ ஓபிஎஸ் நம்ம கூட சேர்ந்திருந்தா நிச்சயம் ஆட்சியை பிடிச்சிருப்போம்.. திமுக ஆதரவோட முதல்வராகனும்னு எடப்பாடி முடிவெடுத்ததுதான் பிரச்சனைக்கு காரணமே.. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சதே திமுகவை எதிர்க்கதான்.. ஆனா எடப்பாடியோ, திமுகவுன் கூட்டணிக்கு ரெடியாகிட்டாரு.. இதை எப்படிங்க ஏத்துக்க முடியும்? திமுகவுடன் நாம சேர்ந்தா நீங்க எல்லாம் ஏத்துக்கதான் முடியுமா? அதனால 25 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து அதிமுகவை காப்பாத்தனும் முடிவு செஞ்சோம்.. நாங்க எம்.எல்.ஏக்கள் மட்டும் இல்லை.. 30 மா.செ.க்களும் எடப்பாடிக்கு எதிராக கிளம்பிட்டாங்க.. ஆனாலும் கட்சி நல்லா இருக்கனுமே திரும்பவும் எடப்பாடிகிட்ட வந்தோம்..

ஆனா நினைச்சமாதிரி நடக்கலையே.. 21 வருஷம் நான் மா.செ.வா இருந்திருக்கிறேன்.. இப்ப வேற பதவி கொடுத்திருக்காரு.. நான் அதிமுக உறுப்பினரா இருப்பேன்.. என்னை நம்புற உங்களுக்கு துணையா இருப்பேன்..

யாரு தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்.. கண்டிப்பா கேட்போம்.. திமுக எதிர்ப்பை எப்படி விட்டுட முடியும்?

வேணும்னே என்னை அசிங்கப்படுத்தவே வாட்ஸ் ஆப் குரூப்களை ஓபன் செஞ்சிருக்காங்க.. இதை எல்லாம் எப்படி தாங்குறது? அதனால நீங்க எல்லாம் என்ன சொல்றீங்களோ.. அதுதான் என் முடிவு.. மா.செ. பதவி கொடுத்திருந்தால்தான் நல்லபடியாக செயல்பட முடியும்.

செங்கோட்டையன், ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகர் மாதிரி நானும் அதிமுகவை விட்டு போயிடுவேன்னு நிறைய பேரு நினைக்கிறாங்க..

இப்பவும் சொல்றேன்.. திமுகவோட சேர்ந்து கூட்டணி வைக்கலாம்னு யாராவது நினைக்கிறவங்க இங்க இருந்தா கிளம்பிடுங்க..”ன்னு வெடிச்சுட்டார்.

எஸ்பி வேலுமணி மத்தவங்கிட்டேயும் பேசிட்டு முடிவை சொல்றேன்னு எங்ககிட்ட சொன்னார்.. நாங்களும் அடுத்து என்னதான் நடக்கும்னு காத்துகிட்டு இருக்கிறோம்”னு சொல்றாங்க ப்ரோ..

எஸ்பி வேலுமணி டீமை பொறுத்தவரைக்கும் பழைய பதவி கொடுக்கலைன்னா ‘கலகம்’தான்னு முடிவில இருக்குது.. எடப்பாடி தரப்புக்கு இது ரொம்ப அதிர்ச்சிதான்.. அதனால அதிமுகவில இன்னமும் பஞ்சாயத்து நீறுபூத்த நெருப்பாதான் தகிச்சுகிட்டு இருக்குங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share