”நடிகர் சூர்யா (Actor Suriya) மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஜூன் 28-ந் தேதி நடைபெற்ற சூர்யா நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசுகையில், “காலத்தின் கண்ணாடியைத் திருப்பி உங்கள் முகங்களைப் பார்க்கும்போது, எனக்கு இங்கே பல எம்.எல்.ஏ-க்கள் தெரிகிறார்கள்; எம்.பி-க்கள் தெரிகிறார்கள். சட்டசபைக்குள் ‘அமைச்சர்’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையின் பின்னால் அமர்ந்திருக்கக்கூடிய நபர்கள் தெரிகிறார்கள். காலமும் கடவுளும் முடிவு செய்துவிட்டால் இது நடக்கும்.
சூர்யா நற்பணி மன்றம் 130 அடி உயரத்திற்குச் செல்லும்; அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும், சூர்யா அண்ணனுக்காக நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் துடுப்பு போட்டால் தான் இந்த படகு முன்னோக்கிச் செல்லும். துடுப்பு போட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இங்கே ‘நான்’ ’ நீ’ என்ற வேறுபாடுகளை மறந்து அண்ணனுக்காக எதையும் இழக்க நான் தயார் என்று நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியானால் சூர்யா அண்ணன் மக்கள் தலைவர். காலமும் கடவுளும் முடிவு செய்துவிட்டால் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது..” என கைதட்டலுடன் பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
