விஜய் தலைமையில் ஜூலை 1-ல் தவெக, தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

Published On:

| By Mathi

Vijay to chair TVK and alliance partners' meeting on July 1

முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 1-ந் தேதி நடைபெற உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு

ADVERTISEMENT
  • காங்கிரஸ்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுகவும் தவெக அரசை ஆதரிக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தவெக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூலை 1-ந் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக மற்றும் தோழமை கட்சிகள் கூட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share