முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி. எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Congress MP Criticizes CM Vijay's Appointment Decisions

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் (CM Vijay) நியமித்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று ஜூன் 28-ந் தேதி செய்தியாளர்களிடம் ஜோதிமணி எம்.பி. கூறியதாவது: : மிகக் குறுகிய காலத்தில் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார். வெளிப்படையான, ஊழலற்ற, விரைவான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்கிற அவரது தெளிவான மற்றும் உறுதியான எண்ணம் மக்களை அடைந்திருக்கிறது.

ADVERTISEMENT

ஒரு முதலமைச்சருக்கு அதிக நன்மதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாடு அரசு தனது நியமனங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

டெல்லியில் இருப்பவர்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றிய அரசியல், சமூக மற்றும் வரலாற்றுப் புரிதல் இருப்பது அவசியம். தமிழ்நாட்டின் பிரதிநிதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தால் அது சிறப்பாக இருக்கும்

ADVERTISEMENT

கர்நாடகத்திற்கும் நமக்குமான மேகதாது போன்ற பிரச்சனைகள் இருக்கும் சூழலில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிப்பது சிக்கலான ஒன்றாகத் தெரிகிறது. அவர் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவார் என்று கூற முடியாது என்றாலும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் மத்திய அரசின் போக்கைக் கருத்தில் கொண்டு, இது போன்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share