தமிழ்நாட்டில் தனியார் நடத்தும் மதுபான கடைகளான ‘மனமகிழ் மன்றங்களுக்கு’ சிறப்பு கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் “மனமகிழ் மன்றம்” (FL-2 Recreational and Club Bars) என்ற பெயரில் தனியார் மதுபான கடைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தனியார் நடத்தும் இந்த FL-2 மனமகிழ் மன்றங்களுக்கான் சிறப்பு கட்டணத்தை தமிழ்நாடு அரசு 2 மடங்காக உயர்த்தி உள்ளது.
இதன்படி,
சென்னை மாநகரத்தில் FL-2 மனமகிழ் மன்றங்கள் தொடங்க
- விண்ணப்ப கட்டணம் ரூ10,000
- லைசென்ஸ் கட்டணம் ரூ30,000
- சிறப்பு கட்டணம் ரூ. 30,00,000 (முன்னர் ரூ15 லட்சமாக இருந்தது)
- 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான மாநகராட்சிகளில் சிறப்பு கட்டணம் ரூ25,00,000
- 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் சிறப்பு கட்டணம் ரூ.20,00,000
- நகராட்சிகளில் சிறப்பு கட்டணம் ரூ15,00,000
- அனைத்து இதர பகுதிகளில் சிறப்பு கட்டணம் ரூ10,00,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
