மக்களே மாபெரும் ஊழல்வாதிகள் – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்” என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியிருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் பவானி நகராட்சி, ஜம்பை பேரூராட்சி, தொட்டி பாளையம், குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை, சட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜய் பாலாஜி வழங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர், “கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தேர்தலில் மக்கள் நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்” என்று பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share