போதைப் பொருள் சர்ச்சை: அமைச்சர் சரத்குமார் டிஸ்மிஸ் கோரி தடையை மீறி போராட்டம்.. திமுகவினர் கைது!

Published On:

| By Mathi

DMK cadres arrested for staging protest against Minister Sarathkumar

போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை டிஸ்மிஸ் செய்ய கோரி தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற திமுகவினர் (DMK) கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அமைச்சர் சரத்குமார், போதைப் பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக அமைச்சர் சரத்குமாரும் விளக்கம் கொடுத்திருந்தார்.

ADVERTISEMENT

ஆனாலும் அமைச்சர் சரத்குமார், போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜூன் 29-ந் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணி அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

ஆனால் திமுக மாணவர் அணியின் இந்த போராட்டத்துக்கு சென்னை, மதுரை, கோவை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இருப்பினும் போலீசார் தடையை மீறி சென்னை உள்ளிட்ட நகரங்களில் திமுகவினர் இன்று போராட்டம் நடத்த முயன்றனர். இதனையடுத்து தடையை மீறிய திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share