)அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று, தேர்தல் பிரச்சாரத்துக்காக விருத்தாசலம் வந்தார். அவரது பாதுகாப்புக்கு, ஜெயலலிதா ஹெலிபேடிலிருந்து மேடைக்கு வருவதற்கு வசதியாக சட்டஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் 15 எஸ்.பி-க்கள், 3 ஐ.ஜி-க்கள் மற்றும் போலீஸார் காத்திருந்தனர். அட்வான்ஸ் பைலட், பைலட், எஸ்கார்ட், என்.எஸ்.ஜி. (மத்திய தேசிய பாதுகாப்பு பிரிவு) கார், விஐபி கார், எஸ்கார்ட் கார், ஆம்புலன்ஸ் வேன், டைல் வேன் (இந்த டெம்போ வேனில் 7 போலீஸார் இருப்பார்கள்), ஓ பாஸிட்டிவ் பிளட் குரூப் உள்ளவர்கள் (ஜெயலலிதாவின் பிளட் குரூப் ஓ பாஸிட்டிவ்தான்) என்று அனைத்தும் தயாராக இருந்தன. ஆனால், ‘எதுவுமே வேண்டாம் என்று மேடம் சொல்லிட்டாங்க. சிஎம் காருக்கு முன்னால் ஒரு என்.எஸ்.ஜி. கார், பின்னால் ஒரு என்.எஸ்.ஜி. கார் போதும் என்று அனைத்து போலீஸ் பாதுகாப்பு வாகனங்களையும் விரட்டிவிட்டார்கள்’ என்று ஆச்சர்யப்பட்டார்கள் போலீஸ் அதிகாரிகள். இதற்குக்காரணம், ‘தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார்; தமிழக போலீஸ் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்திவிட்டார் என்று பேச்சு வரக்கூடாது’ என்பதுதானாம்.
தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடித்த ஜெயலலிதா
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








