அடிதடி, ஆபாச மெசேஜ்.. அடுத்தடுத்து சர்ச்சை.. நாளை தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்?

By Mathi

|

Published on 10 Nov 2026, 4:13 AM

TVK MLAs Meeting

துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான தாக்குதல் புகார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான ஆபாச மெசேஜ் குற்றச்சாட்டு என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை (நவ. 11) சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை துணை சபாநாயகரும் துறையூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர், கார்த்திக் குமார் என்பவரை தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதல் நடைபெறவில்லை என்று கார்த்திக் குமார் வெளியிட்ட மறுப்பு வீடியோவும், பின்னர் அந்த வீடியோவை மிரட்டிப் பதிவு செய்ய வைத்ததாக அவர் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ரவிசங்கர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தவெக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்.எல்.ஏ.

இதனிடையே கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தைக் கண்டித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் முதல்வர் விஜய் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்?

இத்தகைய சூழலில், தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நவ. 11-ந் தேதி சென்னைக்கு வருமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான ஆபாச மெசேஜ் புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம். மேலும், கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது என எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைமை கடுமையான எச்சரிக்கை விடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel