”தவெக ஆட்சி 3 மாதம் தாங்குமா?” ஸ்டாலின் கேள்வி! “நாங்க பாதுகாப்போம்!” – திருமாவளவன் பதில்!

Published On:

| By Mathi

TVK Govt's Stability; Thirumavalavan Vows Full Protection

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக் காலம் முடியும் வரை ஆதரவு தருவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

PTI செய்தி நிறுவனத்துக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல், டெல்லி ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெகவை (TVK) காங்கிரஸ் எப்படி அழைக்க முடியும்? இனிவரும் காலங்களில் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளில் தவெகவும் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணியில் தவெக- விசிக வரவேற்பு

இந்தியா கூட்டணியில் விசிக-வும் ஒரு அங்கம். நாங்கள் தமிழ்நாடு அரசாங்கத்திலும் இடம் பெற்றுள்ளோம்; நாங்கள் அமைச்சரவையில் இணைந்துள்ளோம். எனவே, எதிர்காலத்தில் தவெகவை அழைப்பது குறித்து இந்தியா கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால் நாங்கள் அதனை வரவேற்போம்.

3 மாதங்களில் தவெக (TVK) ஆட்சி கவிழுமா? ஸ்டாலினுக்கு பதில்

இன்னும் ஓரிரு மாதங்களில் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே உள்ள நாங்கள் அனைவரும் – காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் ஆகிய அனைத்துக் கட்சிகளும் – தவெக ஆட்சி அமைப்பதற்கும், அந்த ஆட்சியை நிலைப்படுத்துவதற்கும் எங்களது ஆதரவை வழங்கியுள்ளோம். எனவே, இந்த ஆட்சி முடியும் காலம் வரை எங்களது ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். அதனால், இந்த ஆட்சி கவிழாது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தவெக ஆட்சி 3 மாதம் தாங்குமா? ஸ்டாலின் கேள்வி

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தவெக ஆட்சி 3 மாதம் கூட தாக்கு பிடிக்காது” என கூறியிருந்தார். இதற்கு சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது, தவெக ஆட்சியைப் பாதுகாப்போம் என திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share