விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“தமிழக சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்குத் திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.
