அதிமுக – திமுக கூட்டணியா? “குதிரை பேரத்துக்கான சாக்கு” – மா.பா.பாண்டியராஜன் தாக்கு!

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக – திமுக கூட்டணி என்பது எந்தச் சூழலிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்றும், கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குதிரைப் பேரம் நடத்துவதற்கே இதைப் ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் இன்று (ஜூலை 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “அதிமுக – திமுக கூட்டணி குறித்து ஒரு புரளி கிளப்பப்படுகிறது என கட்சியின் பொதுச்செயலாளர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். எந்த நிலையிலும் அதிமுக, திமுக கூட்டணி என்பது சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்.

ADVERTISEMENT

திமுக தரப்பில் அதிமுகவை ஆதரிக்க முன்வந்தது உண்மைதான். உதயநிதியே அதைச் செய்தார் என்று பொதுச்செயலாளரும் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமா? சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்தில் இது பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அவர்களின் ஆதரவை ஏற்று அதிமுக இயங்கும் என யாருமே சொல்லவில்லை.

இது முற்றிலும் புரளி. கட்சியிலிருந்து வெளியேறுவதற்கும், குதிரைப் பேரம் நடத்துவதற்கும் தான் இதை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி உள்ளோம்.

ADVERTISEMENT

ராஜேந்திர பாலாஜி கூறிய ஒரு சாதாரண விஷயத்தைத் திரித்துப் பேசி, அவரை ‘புரோக்கர் வேலை பார்க்கிறார்’ என அமைச்சர் கூறியிருப்பது மிகவும் தவறான பேச்சு. இதன் மூலம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்த கட்சி தீர்ந்த சக்தி ஆக வேண்டும் என அவர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share