டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil February 25 2024

top ten news today in Tamil February 25 2024

மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 25) மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா!

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகம்!

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது.

சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் சந்திப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லோகலட்சுமி மகாலில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

மாரத்தான் போட்டி!

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சென்னை பெசன்ட் நகரில் இன்று மாரத்தான் ஓட்டப்பந்தயம் தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 645-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெதர்லாந்து, நேபாளம் மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சொர்க்கலோக எடிஷன் இருக்கா என்ன? : அப்டேட் குமாரு

சசிகலா வீட்டில் ரஜினி

டிஜிட்டல் திண்ணை: 6 மாத ஆபரேஷன்… அசால்ட் அண்ணாமலை… ஆதங்கத்தில் பொன்னார்- விஜயதரணி கேட்டது பாஜகவில் கிடைக்குமா?

மக்களவை சீட் ஓகே…. மாநிலங்களவை சீட் என்னாச்சு? : காதர் மொய்தீன் பதில்!

top ten news today in Tamil February 25 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share