புதிய தலைமை செயலகம் கட்ட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Published On:

| By Mathi

New Tamil Nadu Secretariat

முதல்வர் விஜய் அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மயிலை த.வேலு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “கடலோர ஒழுங்கு முறை மண்டல பகுதியான பட்டினப்பாக்கத்தில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. நிதி நெருக்கடியாக இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. இந்த சூழலில் 1200 கோடி ரூபாய்க்கு புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது தன்னிச்சையானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ராஜேஷ் என்பவர் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “ தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது; தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு புதிய தலைமை செயலகம் கட்டுவது கூடுதல் செலவாகும். மேலும் இந்த புதிய தலைமை செயலகம் கடலோரப் பகுதியில் அமைவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share