பட்டினப்பாக்கத்தில் அடுத்த மெகா திட்டம்… மெரினா-மாமல்லபுரம் கடல்வழிப் பாலம்: ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!

Published On:

| By Mathi

Marina-Mamallapuram Sea Link

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் மெகா திட்டத்தைத் தொடர்ந்து, சென்னையில் மற்றொரு பிரம்மாண்ட திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க உள்ளது. மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல்வழிப் பாலத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மெரினா முதல் மாமல்லபுரம் வரை கடலிலேயே பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் மாநில அளவிலான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (22.09.2026) சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: மும்பையில் உள்ள பாந்த்ரா–வொர்லி கடல்வழிப் பாலம் ஒரு பெரிய உதாரணம். இந்தக் கடல்வழிப் பாலத் திட்டத்தை நாம் ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

இங்கே சென்னை நகரில் மெரினாவிலிருந்து மகாபலிபுரம் வரைக்கும் கடலிலேயே எப்படி ஒரு மேம்பாலத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். பாந்த்ராவையும் வொர்லியையும் எப்படி இணைத்தார்களோ அதேபோல இங்கும் செய்ய வேண்டும். இப்போது கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அதிகமான போக்குவரத்து ஏற்பட்டிருக்கிறது. சாலையை விரிவாக்க வேண்டுமென்றால் அதற்கும் ஓர் எல்லை இருக்கிறது.

எனவே மும்பையில் பாந்த்ரா–வொர்லி கடல்வழிப் பாலத்தை எப்படி அமைத்தார்களோ, அதே மாதிரியான ஒரு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நாம் தொடங்க வேண்டும். மகாபலிபுரம் வரைக்கும் அழகாகக் கடலிலேயே செல்லும் வகையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share