டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil December 11 2023

top ten news today in Tamil December 11 2023

ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தீர்ப்பு!

ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வழங்குகிறது.

மத்திய குழு சென்னை வருகை!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று சென்னை வருகிறது.

சேதமடைந்த ஆவணங்கள் சிறப்பு முகாம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த ஆவணங்களை இழந்தவர்களுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி திறப்பு!

மழை, வெள்ள பாதிப்பால் கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த சென்னை மாவட்டத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

சபரிமலை தரிசனம்!

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் இன்று முதல் 1 மணி நேரம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் ஓடிடி ரிலீஸ்!

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 569-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குபேர கிரிவலம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று குபேர கிரிவலம் நடைபெற உள்ளது‌.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பல்கலைக்கழக தேர்வு!

மழை, வெள்ள பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் இன்று துவங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.6000 நிவாரணம் : டோக்கன் கொடுப்பது எப்போது?

சபரிமலை தரிசன நேரம் : முக்கிய அறிவிப்பு!

சி.எம். சொன்னா என்ன ஹெச்.எம். சொல்லட்டும்: அப்டேட் குமாரு

top ten news today in Tamil December 11 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share