சட்டமன்றத்தில் மறைந்த திரை பிரபலங்களுக்கு இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அமைச்சர் மரிய வில்சன் விஜய் அரசின் முதல் பட்ஜெட்டை வாசித்தார். நேற்று வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 7) முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ், எழுத்தாளர் புவியரசு, பின்னணி பாடகி எஸ். ஜானகி, எழுத்தாளர் பூமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share