முன்னாள் முதல்வர் கலைஞரின் 8ஆவது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இயற்கை எய்தினார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.
அந்தவகையில் இன்று கலைஞரின் 8வது நினைவுநாளினையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்தசூழலில் கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதில் போராளி ஓய்வதில்லை என்று மலர்களால் எழுதப்பட்டுள்ளது.

கலைஞரின் நினைவு நாளையொட்டி காலை முதலே திமுகவினரும், கலைஞரின் திட்டங்களால் பயனடைந்தவர்களும் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
