மத்திய அரசின் வரிகளில் நியாயமான நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் நாளை தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
சட்டசபையில் நாளை ஆகஸ்ட் 7-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார்.
அதில்,
- மாநிலங்களுக்கு நியாயமான நிதி பகிர்வு அளிக்க வேண்டும்
- மத்திய அரசின் வரிப் பகிர்வு தமிழ்நாட்டு நிதி நலனைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்
- மத்திய வரிப் பகிர்வு அளவுகோல்கள், எந்த மாநில நலனையும் பாதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.

நிர்மலா சீதாராமனுடன் விஜய் தூதர் சந்திப்பு
முன்னதாக, ”தமிழ்நாடு அரசின் வியூக வகுப்பாளர்” என சொல்லப்படும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டு நிதி நிலைமை தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தியதாக பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை மத்திய அரசின் வரிப் பகிர்வு தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
