தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை நடத்தினார்.

பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி, “Discussed the state of Tamil Nadu’s finances, among other things, with Finance Minister @nsitharaman who gave a patient hearing நிதி அமைச்சர் @nsitharaman அவர்களிடம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து, மற்ற விஷயங்களுடன் விவாதிக்கப்பட்டது.. கருத்துகளைப் பொறுமையுடன் கேட்டறிந்தார்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பிரவீன் சக்கரவர்த்தியின் எக்ஸ் பக்கத்தில்,
@OMMANAKUTTAN420: ஆட்சில இருப்பது த.வெ.க நீங்க என்ன… நிதிநிலைமை பத்தி பேச.. எதுக்கு இந்த ..வேலை
@dreamseller2000: இதையெல்லாம் பேச நீங்கள் என்ன தமிழகத்தின் நிதி மந்திரியா? அப்படியென்றால் மரிய ஜோசப் வெறும் தொக்கா?” என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ”Business Standard” பத்திரிகையில் பிரவீன் சக்கரவர்த்தியை Strategist for TN govt. என குறிப்பிட்டிருந்தது விவாதப் பொருளானது. தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இப்படி ஒரு நியமனத்தை அறிவிக்கவில்லை ஏன்? என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில்தான், தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி படத்துடன் பதிவிட்டுள்ளார். இதனால் பிரவீன் சக்கரவர்த்திக்கு “Strategist for TN govt” என்கிற பதவியை முதல்வர் வழங்கி இருப்பது உண்மைதானா? என்றும் சோசியல் மீடியாவில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
