கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுதினம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 8 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கலைஞரின் நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,முதன்மை செயலாளர் கே.என்.நேரு , துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ADVERTISEMENT

இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share