பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஆணைய பதவி கொடுத்த முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு 2025 டிசம்பர் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 

ADVERTISEMENT

அப்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”51 வயது நிரம்பிய நிலையில், நான் கடந்த 12 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த வணிகப் பொறுப்புகளிலிருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைய முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தச்  சூழலில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியில் இணைந்த பலருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

அந்தவகையில்,  பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மூன்று ஆண்டுகள் அவர் இந்த பதவியை வகிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக,  2025 செப்டம்பர் 30ஆம் தேதி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share