சி.எம். சொன்னா என்ன ஹெச்.எம். சொல்லட்டும்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

வெளியூர்ல இருந்ததால பையனுக்கு போன் போட்டு, ‘என்னடா நாளை அரையாண்டு பரிட்சை. நல்லா படிச்சிருக்கியா?’னு விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான், திடீர்னு அரையாண்டு பரிட்சைய டிசம்பர் 11-லேர்ந்து 13 ஆம் தேதிக்கு மாத்திட்டதாக முதலமைச்சர் அறிவிச்சிருக்கிறதா நியூஸ் பாத்தேன்.

உடனே வீட்டுக்கு போன் போட்டு பையன்கிட்ட, ‘நாளைக்கு எக்ஸாம் இல்லடா. புதன் கிழமைதான்’னு சொன்னேன். உனக்கு யாரு சொன்னாங்கனு கேட்டான். ‘சி.எம். சொல்லியிருக்கார்டா… நியூஸ்ல ஓடுது பாரு’னு சொன்னான். அதுக்கு என் பையன், ‘அப்பா நியூசுக்கு வேணா சி.எம். சொல்லலாம்.

ஆனா எங்களுக்கு ஸ்கூல் ஹெச்.எம்.தான் சொல்லணும்’னு போனை அவங்க அம்மாகிட்ட கொடுத்துட்டு போயிட்டான். அப்புறம் ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வந்த பிறகுதான் நம்பியிருக்கான். இந்த காலத்து பயபுள்ளைங்க ரொம்ப விவரமாத்தான் இருக்காங்க. நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்

ஒருவேள 2024 வந்தா உருப்பட்டுருவோமா..

ச்ச ச்ச இருக்காது.. நம்ம என்னைக்கு உருப்பட்டு இருக்கோம்!

Villainism

5 IPL கப் அடிச்ச ஏன் செல்லத்துக்கு, ICC கப் அடிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது கண்ணா!

Manjari

ரெண்டு போட்டோவுக்கு ஆசைப்பட்டு.. மூட்டு வலி தைலம் முக்கால் லிட்டர் வாங்கிற மாதிரி ஆகிருச்சே!

மிருதுளா (I.N.D.I.A)

மழை வெள்ளத்துல தவிச்சிட்டு இருக்கோம்…
என்னங்க இவ்ளோ லேட்டா கொரியன் பன் கொண்டு வந்துருக்கீங்க!

நெல்லை அண்ணாச்சி

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதே நோக்கம்…சரத்குமார்..!!
மச்சானிடம் பிடித்ததே இந்த ” sense of humor ” தான்…!!!

கோயம்புத்தூரான்

கோயமுத்தூர்ல கடந்த ஒன் அவரா மழை ஊத்திட்டு இருக்கு !
நாளைக்கு மெட்ராசுக்கு அனுப்பற நிவாரணத்துல ஒரு வண்டி இங்கயே இருக்கனும் போலயே!

Writer SJB

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போனீங்களே ஏன் உடனே திரும்பி வந்துட்டீங்க..?

2015-ல ஏன் செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாம திறந்து விட்டீர்கள் என்று கேட்கிறார்கள் அதனால திரும்பி வந்துட்டேன்..!

பாக்டீரியா

: புயலையும் பாத்தாச்சு….

: மழையையும் பாத்தாச்சு…

– அடுத்து சுனாமி வருதான்னு பாப்போம்…!

தர்மஅடி தர்மலிங்கம்
அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெறாது – நிர்மலா சீதாராமன்!
இதுக்கு முன்னயும் அப்படி தான இருந்துச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-லாக் ஆஃப் 

திண்டுக்கல் லியோனியை ஆட வைத்த ஆலம்பனா இயக்குநர்!

176 மூட்டைகள்… 300 கோடிக்கு மேல்… பணத்தை எண்ணி பழுதான மெஷின்கள்! கரன்சி குவித்த காங்கிரஸ் எம்.பி. யார் இந்த தீரஜ் சாஹு?

+1
2
+1
11
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *